நேரடி வரிகள் குறித்த ஆலோசனை முகாம்
புதுச்சேரியில் நேரடி வரிகள் குறித்த ஆலோசனை முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
விழுப்புரம்
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை தலைவர் விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் நேரடி வரிகள் குழுவின் தலைவர் சஞ்சய் அகர்வாலின் வழிகாட்டுதலின்படி நேரடி வரிகள் குறித்த சந்தேகங்கள் பற்றி பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமை) வரி ஆலோசனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமானது புதுச்சேரி இளங்கோ நகர் 2-வது மெயின்ரோட்டில் உள்ள புதுச்சேரி கிளையான இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன அலுவலகத்தில் 2 வரி நிபுணர்கள் மூலம் நடக்கிறது. இம்முகாமில் புதுச்சேரி, விழுப்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நேரடி வரிகள் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.