மானியத்துடன் கடன் வழங்குவது குறித்த ஆலோசனை முகாம்


மானியத்துடன் கடன் வழங்குவது குறித்த ஆலோசனை முகாம்
x

மானியத்துடன் கடன் வழங்குவது குறித்த ஆலோசனை முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் வட்டாரத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக தொழில் முனைவோர்களுக்கான பிறதுறை அரசு நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் ஆலோசனை முகாம் அருகம்பாளையத்தில் உள்ள வட்டார திட்ட மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.வட்டார அணித்தலைவர் மணி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் தலைமை உரையாற்றினார். மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் சுகுணா, வேளாண்மை அலுவலர் (வேளாண்மை வணிகம்) சுந்தரவடிவேல் மற்றும் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கக்கூடிய கடன்கள் மற்றும் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய மானிய கடன் உதவிகள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கரூர் வட்டார வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலர் கனகராஜ் செய்திருந்தார்.


Next Story