குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு- 8-ந் தேதி நடக்கிறது


குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு-  8-ந் தேதி நடக்கிறது
x

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 8-ந் தேதி நடக்கிறது.

கரூர்

மாணவர் சேர்க்கை

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் (சட்டமன்ற பொன்விழா) 2022 - 2023-ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவ- மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவினருக்கும் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ-மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவ-மாணவிகள்) கலந்தாய்வு நடைபெறுகிறது. 10-ந் தேதி இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், கணினி அறிவியல், மின்னணுவியல், இயற்பியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

தரவரிசை பட்டியல்

இதனைதொடர்ந்து 12-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 16-ந் தேதி இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ- மாணவிகள் தங்களின் பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் 5 நகல்கள், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம் அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் 5 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகள் தங்களுக்கான கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் தங்கள் தரவரிசை பட்டியல் விவரங்களை கல்லூரி இணையதள முகவரியில் (www.gackulithalai.ac.in) பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி

இதேபோல் காணியாளம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை நிரப்பவும், இக்கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கார்மெண்ட் டெக்னாலஜி பிரிவில் மாணவர் சேர்க்கைக்காகவும், வரும் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்காக கல்லூரி வளாகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இக்கல்லூரியில் சேர ஆர்வமுள்ள, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு வந்து விண்ணப்பித்து, நேரடியாக சேர்ந்து பயன் பெறலாம் என கல்லூரி முதல்வர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.


Next Story