தொழில் வாய்ப்புக்களுக்கான ஆலோசனை கூட்டம்
சிறப்பு தொழில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல்துறை சார்பில் பட்டயக் கணக்காளர் படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான சிறப்பு தொழில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல்துறை தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். மாணவன் அவினாஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை மாணவி கற்பகம் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பட்டயக்கணக்காளர்கள் சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ சிவகாசி கிளை செயலர் சுரேஷ்சந்தர், பட்டயக் கணக்காளர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியர் பாபுபிராங்கிளின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகள் சங்கீதப்ரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவன் மகாராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story