கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி அங்கன்வாடி மையத்தில் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பி.கே. நாகராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வகை மாற்றுத் திறனாளி களுக்கும் பென்ஷன் ரூ. 1000-ல் இருந்து ரூ.2,000-ம் ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது.
கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் அனைத்து வகை மாற்றித் திறனாளிகளுக்கும் வீடு, வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீடுகள் கட்டிக் கொடுத்திட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது அவர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாற்றுத் திறனாளி களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், கைபேசி, உதவித்தொகை வேண்டி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பாலமுருகன், அருண், அந்தோணி, சுப்பிரமணி, மாரியப்பன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.