நித்திரவிளையில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு ெகாடுத்துமது வாங்கிய 3 பேர் சிக்கினர்
நித்திரவிளையில் டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கிய 3 பேர் சிக்கினர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளையில் டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கிய 3 பேர் சிக்கினர்.
டாஸ்மாக் மது கடை
நித்திரவிளை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு தினசரி காலை, மாலை வேளைகளில் ஏராளமான மது பிரியர்கள் மது வாங்க வருவது வழக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இதனை பயன்படுத்தி சிலர் ரூ.500 கள்ள நோட்டுகள் கொடுத்து மது வாங்கியுள்ளனர். மறுநாள் கடையின் மேற்பார்வையாளர் வங்கியில் பணத்தை செலுத்த சென்ற போது ஒருசில கள்ள நோட்டுகள் இருப்பதை அடையாளம் கண்டு திருப்பி கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுகள் ஒரே வரிசை எண்ணில் இருந்தது.
3 ேபர் சிக்கினர்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை மேற்பார்வையாளர் கள்ள நோட்டுகளை கொடுத்து மது வாங்கியவர்களை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி கள்ள ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு கூட்டம் அதிகமாக இருந்தபோது மூன்று வாலிபர்கள் வரிசையில் வந்து மது வாங்க 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அந்த நோட்டை பரிசோதனை செய்த போது அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டின் வரிசை எண்ணும், ஏற்கனவே எழுதி வைத்திருந்த வரிசை எண்ணும் ஒன்றாக இருந்தது. இதனால் அந்த ரூபாய் கள்ள ேநாட்டு என்பது உறுதியானது.
உடனே கடையில் இருந்த விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 3 வாலிபர்களையும் விசாரணைக்காக ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.