தொடக்கநிலை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
தொடக்கநிலை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
திருவாரூர்
நன்னிலம்:
நன்னிலம் வட்டாரத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நேற்று நன்னிலம் வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வன், மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story