நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாடுகள் சாவு


நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாடுகள் சாவு
x

கணியம்பாடியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாடுகள் இறந்தன.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தில் புதூர் ஏரிக்கரை ஓரம் மாந்தோப்பு உள்ளது. அந்த தோப்பில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் காளை மாடு மற்றும் சேட்டு என்பவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தரையில் இருந்த நாட்டு வெடிகுண்டை மாடுகள் கடித்துள்ளது. இதனால் வெடித்து சிதறிய வெடிகுண்டால் மாடுகளின் வாய் பகுதி மற்றும் தலை சிதறியது. இதில் உயிருக்கு போராடிய மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மாந்தோப்பில் காட்டுப்பன்றிகளுக்காக நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருக்கலாம் என்றும், அதைமாடுகள் கடித்து இறந்திருக்கலாம் என்றும், நாட்டு வெடிகுண்டுகள் வைத்தது மலைவாசிகளாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story