நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்
ஓசூர் வனக்கோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று வனத்துறையினர், போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் யானைகளையும் நாட்டுத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, அவற்றை வைத்திருக்கும் பொதுமக்கள், வனத்துறை அலுவர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவிட்டு இருந்தார். மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பேரில் 111 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிராம மக்கள் யாரேனும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகிற 30-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மீறியால் டிசம்பர் 1-ந் தேதிக்கு பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story