நாட்டு நலப்பணி திட்ட முகாம்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
திருப்புவனம்
திருப்புவனத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் நாட்டு நலப்பணித்திட்ட பணியினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இந்த முகாமில் 30 மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம் தூய்மை செய்தல், திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தில் நடைபாதைகளை தூய்மை செய்தல், இருபுறமும் குவிந்துள்ள மணலை அள்ளுதல், மடப்புரம் கோவில் வளாகம், மேல்தளத்தை தூய்மை செய்தல், தலைக்கவசம், டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி, மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு குறித்தும் பணிகள் நடைபெற்றது. முடிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்திவேல்முருகன் நன்றி கூறினார்.