அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ஜோலார்பேட்டை அருகே அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. தலைமைஆசிரியர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரஞ்சித் குமார், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன், நந்தினி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.கார்த்திகேயன், கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.அருள்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
இதனையடுத்து நாட்டு நலப்பணித்திட்ட முகாமை தொடங்கி வைத்து காலை முதல் தூய்மை பணியும் மதிய வேளையில் விழிப்புணர்வு மற்றும் மாணவர்கள் இடையே பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவை நடைபெறும் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அன்புசக்தி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அரவிந்தன், வார்டு உறுப்பினர்கள் முருகன், சாமி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.