லாரி மீது கார் மோதி தம்பதி படுகாயம்
லாரி மீது கார் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.
பெரம்பலூர்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, மங்களம்பேட்டை முல்லை நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 45). இவரது மனைவி கீதா (38). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் சமத்துவபுரம் எதிரே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்ற போது கார் அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சிவசுப்பிரமணியன், கீதா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story