ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயம்


ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயம்
x

நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயம்

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கணவன், மனைவி 2 பேர் பயணம் செய்தனர். வெள்ளமடம் அருகே கிறிஸ்து நகர் பகுதியில் சென்ற போது நாய் திடீரென ஆட்டோவின் குறுக்கே பாய்ந்ததாக தெரிகிறது. இதனால் ஆட்டோ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி காயமடைந்தனர். பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story