சரக்கு ஆட்டோ மோதி தம்பதி படுகாயம்


சரக்கு ஆட்டோ மோதி தம்பதி படுகாயம்
x

சரக்கு ஆட்டோ மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.

கரூர்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 43). இவரது மனைவி சித்ரகலா. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சொந்த வேலை நிமித்தமாக ஒரு ஸ்கூட்டரில் மேட்டுப்பட்டி மின் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த குணசீலன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, யோகேஸ்வரன், சித்ரகலா வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேருக்கும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story