தப்பி ஓடிய கைதி, கோர்ட்டில் சரண்


தப்பி ஓடிய கைதி, கோர்ட்டில் சரண்
x

தப்பி ஓடிய கைதி, கோர்ட்டில் சரண் அடைந்தார்

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் சரகம் பொன்னங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது32). இவரை ஒரு வழக்கில் காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முத்துராமலிங்கம் மற்றும் ராஜூ ஆகிய 2 போலீசார் மனோகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அவரை அழைத்து சென்றனர். அவருடன் மற்றொரு வழக்கில் தொடர்புடைய சவுந்தரராஜன் என்பவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் சவுந்தரராஜனை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து 2 போலீஸ்காரர்களும். சிவகங்கை கிளை சிறைக்கு சவுந்தரராஜனை அழைத்து வந்தனர். அவர்களுடன் மனோகரனும் அழைத்துச்செல்லப்பட்டு இருந்தார்.

சிவகங்கை சிறை வாசலில் மனோகரன், 2 போலீஸ்காரர்களையும் தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தப்பி ஓடிய மனோகரன், சிவகங்கை கூடுதல் மகிளா கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஆப்ரின் பேகம் உத்தரவிட்டார்.


Next Story