பெண் குழந்தையின் கையை அகற்றியதற்கு ரூ.15 லட்சம் இழப்பீடுகோரி வழக்கு


பெண் குழந்தையின் கையை அகற்றியதற்கு ரூ.15 லட்சம் இழப்பீடுகோரி வழக்கு
x

பெண் குழந்தையின் கையை அகற்றியதற்கு ரூ.15 லட்சம் இழப்பீடுகோரி வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய 3 வயது குழந்ைத சுபலட்சுமி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றோம். அங்கு அவளது வலது கை மணிக்கட்டு பகுதியில் மருந்து செலுத்துவதற்காக ஊசி பொருத்தப்பட்டது. அந்த ஊசி முறையாக பொருத்தப்படாததால், எனது மகளின் கையில் வலியும், வீக்கமும் ஏற்பட்டது.

அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு எனது மகளை பரிசோதித்த டாக்டர்கள், மருந்து செலுத்துவதற்காக குழந்ைதயின் கையில் ஊசியை முறையாக பொருத்தவில்லை. இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, குழந்ைதயின் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் அழுகியநிலையில் உள்ளது.

குழந்ைதயின் வலது கை மணிக்கட்டு வரை அகற்றவில்லை என்றால் இந்த பாதிப்பு மேலும் பரவிவிடும் என தெரிவித்தனர். இதனால் எனது மகளின் கை மணிக்கட்டு வரை உள்ள பகுதியை அகற்றிவிட்டனர்.

இதற்கு கோவில்பட்டி டாக்டர்கள், செவிலியர்களின் கவனக்குறைவும், அலட்சியப் போக்கும் தான் காரணம். இதனால் எனது மகளின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தவறான சிகிச்சை அளித்ததற்காக ரூ.15 லட்சத்தை இழப்பீடாக வழங்கும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதார சேவை இணை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டீன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.


Next Story