உசிலம்பட்டி கிடாய் சண்டைக்கு ஐகோர்ட்டு அனுமதி


உசிலம்பட்டி கிடாய் சண்டைக்கு ஐகோர்ட்டு அனுமதி
x

உசிலம்பட்டி கிடாய் சண்டைக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது

மதுரை


முட்டுக்கிடாய் வளர்ப்போர் சங்க செயலாளர் கணேசன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், உசிலம்பட்டி தாலுகா சீமானூத்து கிராமத்தில் சீனிவாசபெருமாள் மற்றும் தோப்பு கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாவை முன்னிட்டு கிடாய்முட்டு போட்டி என்ற கலாசார நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த ஆண்டும் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12-ந் தேதி கிடாய்முட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி போலீசில் மனு அளித்தும் இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, வருகிற 12-ந் தேதி கிடாய்முட்டு போட்டி நடத்த அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உசிலம்பட்டி பகுதியின் பாரம்பரிய கலாசார போட்டியான கிடாய்முட்டு போட்டி பல ஆண்டுகளாக நடக்கிறது. கடந்த ஆண்டும் எந்தவித இடையூறும் இன்றி நடந்தது. எனவே இந்த கலாசார நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரரின் வக்கீல்கள் வாதிட்டனர். விசாரணை முடிவில், கிடாய் சண்டைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு வருகிற 11- ந்தேதிக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story