பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் திறப்பு


பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் திறப்பு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மைநீதிபதி மணிமொழி திறந்து வைத்தார்.

சார்பு நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களுக்கு போதிய வசதி இல்லாத நிலையில், அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் வக்கீல்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண்மை அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, சார்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டது.

திறப்பு விழா

இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கலந்து கொண்டு, சார்பு நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் குத்துவிளக்கேற்றினார். இந்த நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக கலைவாணி பொறுப்பேற்றார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கூடுதல் நீதிபதி மோனிகா, நீதிபதி கணேசன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்க தலைவர் அருணகிரி, செயலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story