திடியன் ஊராட்சியில் ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


திடியன் ஊராட்சியில் ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

திடியன் ஊராட்சியில் ஓடைபுறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றும் வழக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை


மதுரை மாவட்டத்தை சேர்ந்த நட்டுராஜா, மதுரை ஐகோர்ட்டில் 2020-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியன், திடியன் ஊராட்சி வலங்காகுளத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடையில் நீர்வரத்து தடைபட்டு, விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடை புறம்போக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் உள்ள ஓடையை ஆக்கிரமித்தவர்கள் அங்கு மரங்களை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனுதாரர் ஏற்கனவே அளித்த மனுவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அதன்படி 12 வாரத்தில் அவரது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story