தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைக்க கோரிய வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைக்க கோரிய வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் எழுச்சி காரணமாகவும் நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியா மீதும் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழ்நாட்டுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட, தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவைப்படுகிறது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு

அரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு என்ற போலீஸ் படை உள்ளது. அதுபோல தமிழ்நாட்டிலும் தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் ஏதும் இல்லை என்று மனுவில் கூறிவிட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தது ஏன்?' என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர், 'தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஏதாவது தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்தியேகமாக சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

3 பிரிவுகள்

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இலங்கையிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழ்நாடு போலீசில் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளன. அதனால், புதிய பிரிவு அமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை' என்று வாதிட்டார்.

பதில்

அதையடுத்து, இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசும், டி.ஜி.பி. உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story