நாமக்கல்லில் கோா்ட்டு அலுவலர்கள் யோகா பயிற்சி
நாமக்கல்லில் கோா்ட்டு அலுவலர்கள் யோகா பயிற்சி
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று யோகா தினத்தையொட்டி நீதிமன்ற அலுவலர்கள் யோகா பயிற்சி செய்தனர். முன்னதாக பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றிய காணொலி காட்சியினை அனைவரும் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரய்யா, குடும்ப நல நீதிபதி பாலகுமார், தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், சிவில் பார் அசோசியேஷன் இணை செயலாளர் ராஜகோபால் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள் பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். அவர்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜய் கார்த்திக் பல்வேறு யோகாசன பயிற்சிகளை செய்து காண்பித்தார்.
Related Tags :
Next Story