விபத்தில் முதியவர் இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் முதியவர் இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தார்.
விபத்தில் முதியவர் இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தார்.
முதியவர் சாவு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள முதல் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் (வயது80). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே டீ குடிப்பதற்காக நடந்து சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் செல்லையன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் எடை மேலையூர் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (54) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மன்னார்குடி கோர்ட்டில் நடந்து வந்தது.
2 ஆண்டு சிறை
இதில் நீதிபதி அமீர்தீன் தீர்ப்பளித்தார். அப்போது அரசு பஸ் டிரைவர் சுகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.