காசோலை மோசடி வழக்கில் தி.மு.க. பிரமுகருக்கு பிடிவாரண்டு


காசோலை மோசடி வழக்கில் தி.மு.க. பிரமுகருக்கு பிடிவாரண்டு
x

காசோலை மோசடி வழக்கில் தி.மு.க. பிரமுகருக்கு பிடிவாரண்டு

திருப்பூர்

திருப்பூர்கோர்ட் வர்றேன்ட் இஸ்சுக்கே

பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம். தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் தற்போது நகரச்செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அவசரத் தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சம் ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தராததால், அவரிடம் சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022-ல் ராஜேந்திரகுமார் ரூ.5 லட்சத்திற்கான காசோலை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காசோலை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். எவரும் ஜூன் மாதம் 30-ந் தேதி நடக்கும் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

---------------------------


Related Tags :
Next Story