குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தென்காசி

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). சாப்ட்வேர் என்ஜினீயரான இவரும், குஜராத் மாநிலத்ைத சேர்ந்த நவீன் படேல் மகள் குருத்திகாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் குற்றாலம் போலீசில் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு வினித் புகார் மனு அனுப்பினார். இதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக இருதரப்பையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இதில் வினித் தரப்பினர் மட்டும் கலந்து கொண்டனர்.

பின்னர் வினித் தனது மனைவி குருத்திகாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, காரில் பின் தொடர்ந்து வந்த குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கினர். பின்னர் குருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் புகார் செய்தும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காததால் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, குருத்திகாவை கடத்திச் சென்ற கார் செங்கோட்டை அருகே ஒரு குடோன் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story