பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு
நாங்குநேரியில் பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி
நாங்குநேரி:
களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 55). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (54). நேற்று முன்தினம் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நாங்குநேரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.
நாங்குநேரி தெப்பக்குளம் அருகில் சென்றபோது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தமிழ்ச்செல்வி காயம் அடைந்தார். அவர் உடனடியாக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தியபோது, மர்ம நபர்கள் பறித்துச் சென்றது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story