புரட்டாசி மாதத்தையொட்டி மாடுகள் விலை குறைந்து விற்பனை வியாபாரிகள் ஏமாற்றம்

புரட்டாசி மாதத்தையொட்டி  மாடுகள் விலை குறைந்து விற்பனை  வியாபாரிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதத்தையொட்டி மாடுகள் விலை குறைந்து விற்பனை வியாபாரிகள் ஏமாற்றம்

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தை நேற்று வழக்கம்போல் நடைபெற்றது. புரட்டாசி மாதம் தொடக்கம், கேரள மாநிலங்களில் இருந்து அதிகளவில் மீன்கள் வரத்தால் சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.18 ஆயிரத்திற்கு விற்ற பசு மாடு இந்த வாரம் ரூ.17 ஆயிரத்திற்கும், ரூ.23 ஆயிரத்திற்கு விற்ற எருமை மாடு இந்த வாரம் ரூ.22 ஆயிரத்திற்கும் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் ரூ.9 ஆயிரத்துக்கு விற்ற கன்றுகள் ரூ.500 குறைந்து ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story