சிங்கம்புணரி, மதகுபட்டியில் மாட்டு வண்டி பந்தயம்


சிங்கம்புணரி, மதகுபட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
x

சிங்கம்புணரி, மதகுபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி, மதகுபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் சேவுகப் பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவின் 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. வீரையா கோவில் இளைஞர்கள் சார்பாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சின்னமாடு, நடு மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நடு மாடுகள் பிரிவில் எட்டு கிலோ மீட்டர் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 12 ஜோடிகள் கலந்து கொண்டன. சின்ன மாடுகள் பிரிவில், இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. முதலாவது பிரிவில் முதல் பரிசை சொக்கம்பட்டி புதுப்பட்டி அம்பாள் சிகா நண்பர்கள் மாடும், இரண்டாம் பரிசு கோம்பை சிவன் தக்காளி மாடும், மூன்றாம் பரிசு சிங்கம்புணரி செந்தில் மாடும், நான்காம் பரிசு விராமதி சந்திரன் மாடும் வென்றது.

இரண்டாவது பிரிவில் முதல் பரிசு கோட்டூர் ராஜேஷ் மாடும், இரண்டாம் பரிசு கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி மாடும், மூன்றாம் பரிசு தோடனேரி இருளப்பன் மாடும், நான்காம் பரிசு திருவாதவூர் பாண்டித்துரை மாடும் பெற்றது. பெரிய மாடுகள் பிரிவில் முதல் பரிசு பழனிச்சாமி மாடும், இரண்டாம் பரிசு சிங்கம்புணரி காஞ்சனா தேவி மாடும், மூன்றாம் பரிசு தேனி கே.கே. பட்டி சந்தோஷ் நாட்ராயன் மாடும், நான்காம் பரிசு புது சுக்காம்பட்டி கவின் வசந்தி மாடும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசு

சிவகங்கை அருகே மதகுபட்டி பூங்குன்ற அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 40 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பல்லவராயன்பட்டி வர்ஷாஇளமாறன் வண்டியும், 2-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு வண்டியும், 3-வது பரிசை புலிமலைப்பட்டி தர்ஷிகா வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பிரிவில் முதல் பரிசை குப்பச்சிபட்டி அன்புக்கரசிசந்திரன் வண்டியும், 2-வது பரிசை கம்பம் பிரதாப் மற்றும் என்.டி.பட்டி நவீன் வண்டியும், 3-வது பரிசை கிடாரிப்பட்டி மணி வண்டியும் பெற்றது.

2-வது பிரிவில் முதல் பரிசை நகரம்பட்டி பிரதாப்வெள்ளையன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி சின்ன திருஞானம், பெரியதிருஞானம் வண்டி மற்றும் சலுகைபுரம் சரவணன் வண்டியும், 3-வது பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டி மற்றும் விராமதி கருப்பையா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story