மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் செத்தன


மர்ம விலங்கு கடித்து   2 கன்றுக்குட்டிகள் செத்தன
x
திருப்பூர்

மர்ம விலங்கு கடித்து

2 கன்றுக்குட்டிகள் செத்தன

உடுமலையை அடுத்துள்ள அந்தியூரை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு மற்றும் 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, 10 மாதம் மற்றும் 2 மாத வயது உள்ள 2 கன்றுக்குட்டிகளை கழுத்து மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் கடித்து குதறிச்சென்றுள்ளது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் செத்தன.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர், அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி மர்மவிலங்கு நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story