மின்சாரம் தாக்கி மாடு சாவு


மின்சாரம் தாக்கி மாடு சாவு
x

நெல்லை டவுனில் மின்சாரம் தாக்கி மாடு பரிதாபமாக இறந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து செல்லும் இணைப்பு சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது இந்த சாலையோரத்தில் உள்ள மாநகராட்சி தெருவிளக்கு மின்கம்பத்தில் ஒரு மாடு உரசியவாறு சென்றது. அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுபற்றி தகவல் அறிந்த மின்சார வாரியம், மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வினியோகத்தை நிறுத்தி, மாட்டை அப்புறப்படுத்தினா். இதேபோல் கடந்த ஆண்டும் இந்த பகுதியில் மின்கசிவால் மாடு பலியான சம்பவம் நடந்தது. எனவே தெருவிளக்கு கம்பங்களில் மின்இணைப்பு பெட்டி பகுதியை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story