மின்வயரில் சிக்கி பசுமாடு சாவு
அரக்கோணம் அருகே மின்வயரில் சிக்கி பசுமாடு இறந்தது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மகேந்திரன் என்பவரது பசு மாடு அந்த பகுதியில் அருந்து கிடந்த டிரான்ஸ்பார்மர் மின் வயரில் சிக்கி பரிதாபமாக இறந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் முதல் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அரக்கோணம் நாகாலம்மன் நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் சுமார் இரண்டு நேரத்திற்கு பின் மின் தடையை சரி செய்தனர்.
Related Tags :
Next Story