மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் அடைப்பு
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் அடைக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி;
சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் அடைக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
சாைலயில் திரிந்த மாடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ெரயில்வே ரோடு, தேர் மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடுகள் சுற்றித்திரிந்தன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடக்கூடாது மீறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என சீர்காழி நகர் மன்ற தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அபராதம்
இந்நிலையில் நேற்று சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜகோபால், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர். பின்னர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது.