38 மாடுகள் பிடிக்கப்பட்டன
திருவாரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திாிந்த 38 மாடுகளை அதிகாரிகள் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனர்.
திருவாரூர்;
திருவாரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திாிந்த 38 மாடுகளை அதிகாரிகள் பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனர்.
எச்சரிக்கை
திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் திடீரென சாலையை மாடுகள் கடப்பதால் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.இது குறித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவாரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் எண்ணிக்கை குறையவில்லை.
38 மாடுகள்
இந்தநிலையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் தங்கராமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 38 மாடுகள் பிடிக்கப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவதுதிருவாரூரில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 38 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 250 அபராதம் விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் 3 நாட்களில் உரிமையாளர்கள் மாடுகளை பெறவிட்டால், அந்த மாடுகள் பொது ஏலத்தில் விடுப்படும்.. எனவே பொதுமக்கள் தங்களது மாடுகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.