இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் நிலவி வரும் சீர்கேடுகளைக் களைய வேண்டும் என்று கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜெ.ஜெ.நகர் கிளைச்செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் சவுந்திரராஜன், மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர் ரணதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தின் போது எஸ்.வி.புரம், கண்டியக்கவுண்டர்புதூர், வாய்க்கால்பாலம் அருகில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு மற்றும் தீ விபத்து ஏற்படுகிறது. மருள்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள பாலத்தில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கோஷமிட்டனர்.


Next Story