தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்-30-ந் தேதி கடைசி நாள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்-30-ந் தேதி கடைசி நாள்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை

அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், அரசின் நிபந்தனைகளை பின்பற்றி, இணையதளம் வழியாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, உரிமக் கட்டணம் ரூ.500-ஐ வங்கி கருவூலத்தில் செலுத்திய சீட்டு, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சுய உறுதிமொழி பத்திரம்

மேலும் சொந்த கட்டிடம் என்றால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடம் என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடம் இருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி ஆகிய விவரங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story