தர்மபுரி நகரில் 40 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்


தர்மபுரி நகரில் 40 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகரில் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கலையிழந்து காணப்பட்டது. தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பட்டாசுகள் வெடித்தும் மத்தாப்புக்கள் கொளுத்தியும் கொண்டாடினர். இந்த பட்டாசு குப்பைகள், இனிப்பு பெட்டிகள், ஜவுளி குப்பைகள் என சுமார் 40 டன் தீபாவளி குப்பைகள் தெருக்களில் கொட்டப்பட்டது.

இந்த குப்பைகள் பச்சியம்மன் கோவில் மயானம், குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் கோவில் மயானம், சந்தைப்பேட்டை, மதிகோன்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story