நிறைய பட்டாசு வெடியுங்கள்... ஒருநாள் மாசுபாட்டால் ஒன்றும் ஆகாது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
நிறைய பட்டாசு வெடியுங்கள்... ஒருநாள் மாசுபாட்டால் ஒன்று ஆகாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு மக்கள் நமது சகோதர, சகோதரிகளுக்கு இன்பம் பெருகும் தீபாவளி, மன அமைதி தரும் தீபாவளி, அற்புதமான தீபாவளியாக அமையட்டும்.
நிறைய பட்டாசு வெடியுங்கள்... சிவகாசி நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள்... நிறைய பட்டாசு வாங்கி வெடியுங்கள்... 8 லட்சம் பேர் அங்கு உள்ளனர். மிகவும் கஷ்டப்படுகிறார்கள்... அதனால் இந்த முறை நிறைய பட்டாசு வெடிப்போம். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். நிறைய குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். இந்த பசுமை பட்டாசு நிறைய வெடியுங்கள். மாசுபாடு பற்றி ஒருநாள் பெரிதும் பார்க்காதீர்கள்... அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை.. இத்தனை பேர் வண்டியில் போகிறார்கள், வீட்டில் படித்தவர்கள் எல்லாம் மாசுபாடு வந்துவிட்டது குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள்.. அதெல்லாம் ஒன்றும் ஆகாது. ஒருநாள் மாசுபாடு ஒன்றும் ஆகாது. பட்டாசு வெடியுங்கள்.. சிவகாசி வாழவேண்டும், தமிழகம் வாழவேண்டும்.. இந்தியாவின் 95 சதவிகித பட்டாசு நம் ஊரில் இருந்து தான் வருகிறது. அதனால் நிறைய பட்டாசு வெடியுங்கள்' என்றார்.