இரை தேடி படையெடுக்கும் கொக்குகள்
அதிராம்பட்டினம் கடற்கரைக்கு அதிகாலையில் இரை தேடி அதிக அளவு கொக்குகள் வருகின்றன. இந்த கொக்குகள் சிறிய மீன்களை உணவாக்கி கொள்கின்றன.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கடற்கரைக்கு அதிகாலையில் இரை தேடி அதிக அளவு கொக்குகள் வருகின்றன. இந்த கொக்குகள் சிறிய மீன்களை உணவாக்கி கொள்கின்றன.
அலையாத்தி காடுகள்
தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து அலையாத்தி காடுகள் தொடங்கி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக தொண்டியக்காடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை ஒரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் உள்ளது. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளில் மரங்கள் உயரமாகவும் அடர்த்தி மிகுந்தும் உள்ளது. மேலும் இந்த காடுகள் புவியியல் அமைப்பில் ஈரப்பதம் உள்ள காடு என்று ஆராய்ச்சில் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு பறவைகள்
இதனால் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சைபிரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, இங்கிலாந்து, மத்திய ஆசியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால் நாரை, கூழக்கிடா, கடல்ஆழா, மயில்கால் கோழி, பனங்கொட்டை சிறவி, பாம்புதாரா, நத்தகொத்திநாரை, பவளக்கால் உள்ளான், பூநாரை, சாம்பல்நாரை, நாமக்கோழி, வெள்ளைகொக்கு, என பல வகையான பறவைகள் அலையாத்தி காடுகளுக்கு வருகை தந்தது.
சிறிய மீன்கள்
அதிராம்பட்டினம் அலையாத்திக்காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளான கரையூர் தெரு, காந்தி நகர், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ஆகிய துறைமுகபகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு திரும்பும் போது மீன்களை தரம் பிரிக்கும் பொழுது சிறிய வகை மீன்களை துறைமுக ஓரத்தில் வீசுவார்கள். இந்த மீன்களை வெளிநாட்டு பறவைகள் உணவாக உட்கொள்ளும். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெளிநாட்டு பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனது தாய்நாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றது.
மீனவர்கள் ஆர்வம்
இந்தநிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் அதிராம்பட்டினம் கடற்கரைக்கு சிறிய கொக்கு, பெரிய கொக்கு, நீலவால் இலை கோழி, வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதிக்கு பெரிய ெகாக்குகளின் வருகை அதிகரித்து வருகிறது. சூாியன் உதிக்க தொடங்கும் அதிகாலை பொழுதில் கடற்கரையை சுற்றி கூட்டம் கூட்டமாக பறக்கும் இந்த கொக்குகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.இந்த கொக்குகள் கடற்கரையில் மீனவர்களாக வீசப்படும் சிறிய மீன்களை உணவாக்கி கொள்கின்றன. அதிகாலை நேரத்தில் பறவைகள் இரை தேடிவிட்டு வெயில் அடிக்க தொடங்கும் போது கடற்கரை ஓரத்தில் அரணாக அமைந்திருக்கும் அலையாத்தி காட்டுக்குள் புகுந்து விடும். அதிகாலை நேரத்தில் கடற்கரையில் மீனவர்களும் இந்த கொக்குகளுக்காக சிறிய மீன்களை கொட்டி செல்கிறார்கள்.