கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி


கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 4 Jun 2022 6:44 AM GMT (Updated: 4 Jun 2022 6:45 AM GMT)

திருப்பூர் அருகே நடைபெற்ற மருத்துவர்களுக்கான மாநில அளவிலான 20-20 கிரிக்கெட் போட்டியில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்றது.

திருப்பூர்:

திருப்பூர் ரோட்டரி செலிபிரேஷன் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை ஆகியவை சார்பில் கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரிந்த மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கான மாநில அளவிலான 20 ஒவர் கிரிக்கெட் போட்டி திருப்பூரில் நடைபெற்றது.

இதில் தர்மபுரி, திருவாரூர், திருநெல்வேலி, திருச்செங்கோடு, கோவை, சென்னை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டனர். போட்டியை இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் மருத்துவர் சி.என்.ராஜா தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற திருநெல்வேலி அணிக்கு மருத்துவர் முருகநாதன் சாம்பியன் கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம், இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் டைகர் அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த திருவாரூர் அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை ரோட்டரி ரத்த வங்கி துணைத்தலைவர் அருட்செல்வம், இந்திய மருத்துவ சங்க மேற்கு மண்டல துணைத்தலைவர் மருத்துவர் சுரேந்தர்முரளிதரன் ஆகியோர் வழங்கினர்.


Next Story