கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
x

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் பனிமாதா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தி.மு.க. மருத்துவ அணி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தெற்கு கள்ளிகுளம் பனிமாதா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

மருத்துவரணி அமைப்பாளரும், கள்ளிகுளம் பனிமாதா திருத்தல தர்மகர்த்தாவுமான டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், முதலிடம் பிடித்த வடக்கன்குளம் அணிக்கு பரிசுத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையை வழங்கினார். 2-ம் இடம் பிடித்த கள்ளிகுளம் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையை வள்ளியூர் எலைட் ஸ்கேன்ஸ் டாக்டர் கிங்ஸ்டன் சார்பில் டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் வழங்கினார்.

3-வது இடம் பிடித்த ஆரல்வாய்மொழி அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் ஜெயராஜ் சார்பில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் நிமலேஷ் வழங்கினார். 4-வது இடம் பிடித்த வடிவம்மன்பட்டி அணிக்கு பரிசுத்தொகை ரூ.5,000 மற்றும் பரிசுக்கோப்பையை தாமஸ் கோல்டு பைனான்ஸ் உரிமையாளர் ஆகாஸ் ஜேசு தாமஸ் வழங்கினார்.


Next Story