பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி:திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்


பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி:திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 64 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடத்தையும், நாகர்கோவில் தெற்கு திருவிதாங்கூர் இந்து கல்லூரி அணி 2-வது இடத்தையும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி அணி 3-வது இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜான்ஸ் கல்லூரி தாளாளர் ஜெயச்சந்திரன், கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியல் மைய இயக்குனர் ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளுக்கான கன்வீனர் ஜிம்ரீவ்ஸ் சைலன்ட்நைட், ஆண்கள் போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ஹரிங்ஸ்டன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர்.


Next Story