திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட சாமிநாதன் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட சாமிநாதன் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.
x

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட சாமிநாதன் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட சாமிநாதன் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சசாங் சாய் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாமிநாதன் நேற்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பை நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி கல்லூரியில் படித்து அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக 4 ஆண்டு பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் நேரடி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார்.

குற்றத்தடுப்பு நடவடிக்கை

பின்னர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சென்னை அண்ணாநகரில் உதவி ஆணையாளராக பணியாற்றினார். 2007-ம் ஆண்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பாதுகாப்பு பிரிவிலும், விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டராக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை கமிஷனராகவும், அதன்பிறகு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

அதன்பிறகு சென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையிலும் பணியாற்றி 2021-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், 'குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.

-

Related Tags :
Next Story