நெல் கொள்முதல் நிலையத்தில் குற்ற புலனாய்வு துறையினர் திடீர் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையத்தில் குற்ற புலனாய்வு துறையினர் திடீர் ஆய்வு
x

நெல் கொள்முதல் நிலையத்தில் குற்ற புலனாய்வு துறையினர் திடீரென ஆய்வு செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் கல்லடையில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா? என்று விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள ஆவணங்களையும், ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பணிபுரிவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அறிவுரைகள் வழங்கினர்.


Next Story