பயிர்க்கடன் மோசடி: கூட்டுறவு வங்கி ஆய்வாளர் பணி இடைநீக்கம்
பயிர்க்கடன் மோசடி தொடர்பாக, கூட்டுறவு வங்கி ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கம் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.3½ கோடி மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் வெங்கடேசுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வாளர் வெங்கடேசை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டு உள்ளார். இந்த மோசடி புகாரில் சங்க செயலாளர் மோகன் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story