மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டத்துக்கு அனுமதி: சிவகங்கையில் நாளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்


மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டத்துக்கு அனுமதி: சிவகங்கையில் நாளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டத்துக்கு அனுமதிவழங்கியதை தொடர்ந்து சிவகங்கையில் நாளை எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

சிவகங்கை


சிவகங்கையில் நாளை (11-ந் தேதி) நடக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நேற்று மாலை 6 மணிக்குள் இடத்தை முடிவு செய்து தெரிவிக்கும்படி சிவகங்கை துணைபோலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து, சிவகங்கையில் மதுரை சுற்றுச்சாலை அருகில் உள்ள தனியார் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கூறும்போது, சிவகங்கையில் நாளை அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாருக்கும், நகராட்சிக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு இடத்திலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருப்பதால் வேறு இடம் பார்க்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதன்பேரில் சிவகங்கை-மதுரை சாலையில் சுற்றுச்சாலை அருகில் உள்ள தனியார் இடத்தில் கூட்டம் நடத்த விண்ணப்பித்தோம். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர் என்றனர்.


Next Story