சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்அலைமோதியது.

திருச்சி

சமயபுரம், ஆக.15-

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று ஆடி மாத கடைசி ஞாயிறுக்கிழமையையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கொளுத்தும் வெயிலில் கடைவீதி மற்றும் கோவிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் காலில் செருப்பு கூட அணியாமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக அவர்கள் கொண்டு வந்த குடையை பிடித்தபடி நின்று சென்றனர். கோவிலுக்கு வெளிய பந்தல், தரைவிரிப்பு இல்லாததால் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்தனர். வெளிப்பிரகாரத்தில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காததால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அக்னிசட்டி ஏந்தியும், கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், முடிகாணிக்கை செய்தும், கோவிலுக்கு முன்பும், விளக்கேற்றும் இடத்திலும் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பக்தர்கள் அதிக அளவில் வரும் இதுபோன்ற நாட்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கோவிலை சுற்றி தரைவிரிப்பு மற்றும் குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story