வேலூர் மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதல்


வேலூர் மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x

வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன் விலையும் குறைவாக காணப்பட்டது.

வேலூர்

வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன் விலையும் குறைவாக காணப்பட்டது.

மக்கள் கூட்டம்

வேலூர் மக்கான் பகுதியில் உள்ள புதிய மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விற்பனைக்காக மீன்கள் வரவழைக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 100 டன் வரை மீன்கள் விற்பனை நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் இறைச்சி பிரியர்கள் மீன் வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை விட சற்று குறைவாக இருந்தது.

விலை குறைவு

மீன்களின் விலை (ஒருகிலோ) வருமாறு:-

பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.200 முதல் 250 வரையும், இறால் ரூ.300 முதல் ரூ.350 வரையும், நண்டு ரூ.250 முதல் ரூ.300 வரையும், கட்லா ரூ.150 முதல் ரூ.200 வரையும், ஏரி வவ்வால் ரூ.120 முதல் ரூ.150 வரையும், சீலா ரூ.150 முதல் ரூ.200 வரைக்கும், மத்திய ரூ.100 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் மீன்களின் வரத்து குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.


Next Story