பஸ் நிலையத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்


பஸ் நிலையத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 24 May 2023 1:30 AM IST (Updated: 24 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலர் கண்காட்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி

ஊட்டி

சர்வதேச அளவில் புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி ஊட்டியில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதில் மலர்களால் பல்வேறு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்தநிலையில் 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலையில் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் ஊட்டி பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையத்திற்குள் பஸ் வரும் போது, இடம் பிடிப்பதற்காக பைகளை இருக்கையில் போட்டு ஓடி வந்தனர். பலர் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், மலர் கண்காட்சி நிறைவு பெற்றதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை கூடுதலாக பஸ்கள் இயக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறைந்த பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, சீசன் காலங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story