பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்; குடமுழுக்கு விழாவில் பங்கேற்காத பக்தர்கள் இன்று வருகை


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்; குடமுழுக்கு விழாவில் பங்கேற்காத பக்தர்கள் இன்று வருகை
x

குடமுழுக்கு விழாவை நேரில் காண்பதற்கு வர முடியாத பக்தர்கள் இன்று பழனி முருகன் கோவிலில் குவிந்தனர்.

திண்டுக்கல்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 27-ந்தேதி(நேற்று) குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். ஆனால் 4 ஆயிரம் வி.ஐ.பி.க்கள், 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே குடமுழுக்கை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று குடமுழுக்கு விழாவை நேரில் காண்பதற்கு வர முடியாத பக்தர்கள் இன்று பழனி முருகன் கோவிலில் குவிந்ததால், அங்கு கூட்டம் அலைமோதியது. மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.


Next Story