பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்


பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்
x

தீபாவளி பண்டிகை முடிந்து நெல்லையிலிருந்து பயணிகள் வெளியூர் சென்றதால் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

திருநெல்வேலி

தீபாவளி பண்டிகை முடிந்து நெல்லையிலிருந்து பயணிகள் வெளியூர் சென்றதால் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே சென்னை, பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊரான நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வந்தனர்.

ரெயில், பஸ்கள் மூலமாக வந்தவர்கள் அனைவரும் நேற்று மாலை முதல் மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினார்கள். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதை போல் ஆம்னி பஸ் நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் செல்கின்ற பஸ்களில் மக்கள் ஓடி சென்று இடம் பிடித்தனர்.

கூடுதல் பஸ்கள்

இதனையொட்டி நெல்லையில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் பெங்களுரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் இரவில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 100 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து பணிமனையில்‌ தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் சென்னை, பெங்களுரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 35 பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று மாலையில் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் பயணிகளுக்கு எந்தெந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன என்ற விவரங்களையும், பயணிகள் தங்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ரெயிலில் பயணம்

இதேபோல் நேற்று மாலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி தொடக்க விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஏராளமானோரும் நேற்று ஊருக்கு திரும்பினர்.

இதனால் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.


Next Story