பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டம் பூக்கள், திருஷ்டி பூசணிக்காய் விலை கடும் உயர்வு


பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டம் பூக்கள், திருஷ்டி பூசணிக்காய் விலை கடும் உயர்வு
x

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி திருவண்ணாமலை கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி திருவண்ணாமலை கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுதபூஜை

ஆயுத பூஜை பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்து பூஜை செய்வார்கள். மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், பூமாலை அணிவித்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.

வணிக நிறுவனங்ள், கடைகளில் பூஜையில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பொரி, கடலை, தேங்காய், பழம், சுண்டல், பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்குவார்கள்.

மேலும் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை தண்ணீரில் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பூமாலை கட்டி வழிபடுவர்.

இதற்காக பொதுமக்கள் தேவையான பூ, பழங்கள், பொரி, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்களும் அலங்கார தோரணங்களும் வாங்குவார்கள். இதையொட்டி திருவண்ணாமலை கடை வீதிகளில் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்திருந்தன.

அதிக மக்கள் கூட்டம்

ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விற்பனையை பயன்படுத்தி அவற்றின் விலையும் உயர்ந்திருந்தன. எனினும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் வாங்கிச்சென்றனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story